7 Dec 2013

வேகமெடுத்து,,,,,



அவள் பயணித்துக்கொண்டே இருக்கிறாள்.
தனது நெடிய கால்களில் உரமேற்றியபபடியும்
எங்காவது ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டுமாய்/
அவளது பயணங்களில் எதிர்படுகிற மனிதர்கள்
உறவினர்களாகவும்,அக்கம் பக்கத்து வீட்டுகார்களாகவும்,
பிள்ளைகளாவும் மட்டுமே இருக்கின்றனர்.
அவளது பயணம் மிகவும் குறுகியதாகவே/
காலையில் எழுந்ததும் தெரு முனை
காய்கறிக்கடைக்குப்போகிறாள்,
பின் பால் வாங்க,பின் மகன் வீட்டிற்கு,
பின் பேரக்குழந்தையை தூக்கிக்கொண்டு
திரும்பவுமாய் கடைக்கும்,உடல் நலமில்லாத கணவனுக்கு
மருந்து வாங்கவுமாய் சென்று வருகிறாள்.
எப்போதாவது தோன்றினால் மினி பஸ் ஏறி
 நகரத்திற்குள்ளாய் போய் வருவாள்.
கோயிலுக்கும்,பஜாருக்குமாய்/
குறிப்பிட்ட எல்லைகலைகளுக்குள் அடங்கி விடுகிற
வரை படம் போலான அவளது பயணம்
தினந்தோறுமாய் நடந்து கொண்டுதான் இருக்கிறது
ஒரு குறிப்பிட தூரத்திற்குள்ளாகவும்.
சிறிய அளவிலான எல்லைக்குள்ளாகவும்
அவளது முதிய வயதில்/

11 comments:

மகிழ்நிறை said...

எத்தனை வயதிலும்
வீடே உலகமென்றும்
,உலகம் சிறிய வீடெனவும்
வாழும் மனுஷிகள் !!!!!!!!!!1

திண்டுக்கல் தனபாலன் said...

சிரமம் தான்... அவர்களுக்கில்லை...

vimalanperali said...

வணக்கம் மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களே.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Geetha said...

பெரும்பாலான பெண்களின் நிலை இப்படித்தான் .இதற்கு மேல் எதிர்பார்ப்பும் இன்றி பழகி விட்டனர்.நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

வீடே உலகென்று
வாழும்
பெண்கள்
இன்றும் இருக்கத்தான்
செய்கிறார்கள்.
இவர்கள்
வணங்கத் தக்கவர்கள்,

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.3

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள் விமலன் அண்ணா...

vimalanperali said...

வணக்கம் கீதா மேடம்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு கரந்தை ஜெயக்குமார் சார்/

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/