7 Mar 2015

நானும் மற்றவர்களும்,,,,,

எங்களது அலுவலகத்தின்
எதிரே ஒரு டீக்கடை இருந்தது.
டீ 5ரூபாய், காபி7ரூபாய்,
பால்......ஹார்லிக்ஸ்.....
பூஸ்ட்......என தனித்தனியாக
விலைப்பட்டியலை
அறிவித்த கடையில்
பச்சைபனியனும்,
அடர் வண்ணத்தில் லுங்கியும்
கட்டிய ஒருவரும்,
ரோஸ் வண்ண சட்டையும்,
கருப்புக்கலர் பேண்ட்டும்
அணிந்த இளைஞரும் டீமாஸ்டர்களாய்/
இது தவிர வடை போட ஒருவரும்,
கல்லாவை கவனிக்க இருவரும்
கடையை மேற்பார்க்க ஒருவருமாய்
மாற்றி,மாற்றி இருந்தார்கள்.
சகல வசதிகளும் நிறைந்த கடை
என இல்லாவிட்டாலும்,
எந்த வசதியும்
அற்ற கடையாகவும் இல்லை.
கடையின் உள்ளே
செவ்வக சைஸில் ஒரு
முகம் பார்க்கும்கண்ணாடி இருந்தது.
கடைக்கு வருபவர்களில்பாதிபேர்
அதில் முகம் பார்த்துக் கொண்டார்கள்.
கொஞ்சம் பேர்
அதைபார்த்துக் கொண்டே
டீசாப்பிட்டார்கள்.
அருகிலிருந்த
வண்ண மீன் தொட்டியில்
நீந்திய நான்கு மீன்களில்
இரண்டு பெரியதாயும்,
இரண்டு சிறியதாயும்/
தொட்டியின் நடுவில்
நின்று கொண்டிருந்த
சிறுவன் ஒண்ணுக்கு
இருந்து கொண்டிருந்தான்.
அவன் இருந்த நீர்
முட்டை,முட்டையாக
மேல்நோக்கி வருகிறது.
தொட்டியின் அடிப்பரப்பெங்கும்
பரப்பப்பட்டிருந்த ஊதாநிற
கண்ணாடிகற்களில்
நீர் முட்டைகளின் ஒலி பிரதிபலித்தது.
அருகிலிருந்த நீர் குழாய்
கடையின் தேவையை
பூர்த்திசெய்து கொண்டிருந்தது.
கடையின் இடது ஓர மூலையில்
உயரத்தில் இருந்த
வண்ணத்தொலைகாட்சி
பெட்டியில் ஏதாவது நிகழ்ச்சி
ஒடிக்கொண்டிருந்தது.
பிங்க் கலரில் இருந்த
வர்ணப்பூச்சு கண்ணுக்கு இதமாய் இருந்தது.
டீ அருந்த, பேப்பர் படிக்க,
விஷயம் பேச,தொலைகாட்சி பார்க்க,
அசைபோட.......,,
என எந்நேரமும்பிஸியாகவே
இருக்கிற கடையில்
எனது அன்றாடம்
இன்னும் கொஞ்சம் விரிகிறதாய் நினைக்கிறேன்.
நானும்,என்னைப்போன்றவர்களுமாய்/

7 comments:

MADURAI RAJA BLOG said...

பணம்........!!!!பணம் ........!!!!!!அபாரம்.................!!!!!!!!!,அற்புதம் ..................!!!!!!!,கண்டிப்பாக பகிரவும்!
facebook கை வீழ்த்திய tsu வலைத்தளம், facebookil ஒண்ணுமே கிடைக்காது , tsu வில் மகிழ்ச்சியுடன் பணமும் கிடைக்கும், facebook ம் twitter ம் இணைந்ததுதான் tsu,தேவையில்லாத போஸ்ட் களை போடமுடியாது ,பாதுகாப்பானது ,ஆயிரகணக்கான தமிழர்கள் உள்ளனர்,tsu வில் இதுவரை எங்களுக்கு கிடைத்த பணம் ரூ 9,800/- , மாதம் 300 டாலர்கள் வரை சம்பாதிக்க வாய்ப்பு ,கீழே உள்ள ரெபரல் கோடை கிளிக் செய்து எங்களுடன் இணைந்துகொள்ளலாம்,இது FACEBOOK ஐ விட அட்வான்ஸ் ஆனது , android ilum பயன்படுத்தி கொள்ளலாம் (இங்கே க்ளிக் செய்யவும் ). tsu.co/nataraja

KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே கவிதை வடிவில் நடைமுறையை விளக்கி விட்டீர்கள் வாழ்த்துகள்.
தமிழ் மணம் 1

திண்டுக்கல் தனபாலன் said...

கண் முன் தோன்றும் காட்சியை ரசித்தேன்...

vimalanperali said...

வணக்கம் மதுரை ராஜா பிளாக் அவர்களே,
நன்றி வருகைக்கும்,சொல்லுக்கும்/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

தேநீர் என்றாரே
பதிவு சுவை கூடுகிறது நண்பரே
நன்றி
தம +1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/