3 May 2018

கல் ரேகை,,,,/

முக்குரோட்டில்வந்துஇறங்குவதாகத்தான் சொன்னார் குருவையா அண்ணன். இறங்கியும் விட்டார்,

வெளிர் நிறத்தில் பேண்ட்டும் அடைநிறத்திலுமாய் அணிந்திருந்த உடைகள் நன்றாக இருந்தன அவருக்கு,,,/

பொதுவாகவே அவர் பார்த்துப்பார்த்தும் பண்ணியுமாய் உடை அணிகிற நபர் இல்லை,சுருக்கமாகச்சொன்னால்நெஞ்சினருகில்ஓட்டைவிழுந்திருக்கிறசட்டை யைக் கூட போட்டுக் கொண்டு அலுவலகத்திற்கும் இன்னம் பிற இடங்களு க்குமாய் சென்று வந்து விடுவார்.அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள் ள மாட்டார்,

சட்டைதான் இப்படிஎன்றால் அவர் போட்டிருக்குக்கும் பேண்ட் அதற்கு மே லாய் இருக்கும். கலர் வெளுத்து கால்களை நுழைக்கும் இடத்தில் நைந்து கிழிந்து போயும் கணுக்காலுக்குபேண்டைஏற்றிக்கொண்டு போட்டுமாய்த் திரிவார்,

பேண்ட் கொட கொடவென கால்களில் ஆட சட்டை ஒரு அப்பாவிக்கலரில் இருக்க அது அவருக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் போலவும் யாரும் என்னமும் சொல்லி விட்டுப் போகட்டும் என்பது போலவும் அவர் பாட்டுக்கு திரிவார்,போங்கடா டேய்,,,,என,/

ஆனால் உடை விஷயத்தில் அவருக்கு இருக்கும் அசட்டை போல் சக மனித ர்களிடம் நடந்து கொள்ள மாட்டார்.அவரது பழக்க வழக்கமே வேறு மாதிரி யாய் இருக்கும் ,எண்ணன்ணே பன்னிப்பயலுக இப்பிடி இருக்காங்க என ஆரம் பித்து வசை பாடுபவர் அவர்களை நேரில் காணும் பொழுது பாச மழையை அள்ளிப்பொழிந்து விடுவார்,

“வாங்கஜி,வாங்கஜி,நல்லா இருக்கீங்களா என்ன சப்புடுறீங்க,டீயா ,காபியா ,இல்லைகொஞ்சம் பொறுங்க ,சாப்பாட்டு நேரம் வந்ததும் சாப்பாடே சாப்புட்டு ருறலாம்” என்பார்.

இந்தா இருக்குல்ல ஆபீசுக்கு எதுத்தாப்புல கூரைக்கடை,அது பாக்குறக்கு தான் அப்பிடி இருக்கும்,ஏதோ அப்புராணி சப்புராணி நடத்துற கடை போல,ஆனா மத்தியானம் மட்டும் நூறு சாப்பாட்டுக்கு கொறையாம ஓடுமுன்னா பாத்துக் கங்க,அவருக்கு யேவாரம் எப்பிடி இருக்குமுன்னு,இப்ப போயி நாம கடையப் பாத்தமுன்னாலும் ஏதோ வெறுங்கடை போலத்தான் தெரியும்,

கடை மூலையில ரெண்டு பேரு ஒக்காந்து சாப்புட்டுக்கிட்டு இருப்பாங்க,ஆனா ரெண்டு ரெண்டு பேரும் அஞ்சஞ்சி பேருமா ஒரு பத்து இருபது தடவைக்கு மேல சாப்புட வந்துட்டுப் போயிக்கிட்டும் இருப்பாங்க,

அது சாப்புட வர்ற சனத்துக்கும் தோணாது,சாப்பாடு போடுற கடைக்காரருக் கும் அலுப்புத்தெரியாது,அவுங்க வாட்டுக்கு வர கடைக்காரர் பரிமாறுற நிதா னத்துலயும் அன்புலயும் வயிரும் மனசும் நெறைஞ்சி போயிருவாங்க,

இத்தனைக்கும் கடையை புருசன் பொண்டாட்டி ரெண்டு பேருதான் பாத்துக் குருவாங்க,கூடமாட ஒத்தாசைக்கு ரெண்டு ஆளுன்னு நிதானமாத்தான் நடத்தி வந்தாரு கடைய,

”கூட்டம்,கும்பல்ன்னு திடீர்ன்னு ஆளு வந்துட்டா அவருக்கும் அவரு பொண் டாட்டிக்கும் ஆகாது,பயந்து போவாங்கன்னு இல்ல, அவுங்க ஒரே நேரத்துல அம்பது பேரக்கூட ஒக்கார வச்சி சோறு போட்டுருவாங்க, ஆனா அம்பது பேருக்கும் நிதானமா பரிமாறி சோறு போட்ட திருப்தி இருக்காது அவுங்க ளுக்கு,ஏதோ அவக்கு தொவக்குன்னு அள்ளி எறிஞ்ச கதையாத்தான் இருக்கு மே ஒழிய அவுங்க பரிமாறுன சாப்பாடு அவுங்க கை வழியா வந்து யெலை யில விழுந்து வாய் வழியா உள்ள போயி வயித்தையும் மனசையும் நெறக் கும் போது இருக்குற திருப்தி அத்தனை கூட்டத்த ஒக்கார வச்சி சோறு போடும் போது இருக்காது,

”அத ஒனந்தவுங்களாத்தான் என்னவோ,ஜனங்களும் நிதானமாத்தான் சாப்புட வருவாங்க,அஞ்சு பேருக்கு மேல ஆளு வந்துட்டாலே கடைக்கரருக்கும், அவருவீட்டம்மாவுக்கும்மூஞ்சிஇத்துணூண்டாபோயிரும்,அது போல அவுங்க மூஞ்சி சுருக்குறதப்பாக்குறவுங்க, ”அவரு என்ன வேணுமின்னா மூஞ்ச சுளிக்கிறாரு,நம்மள செமைய கவனிக்காம போயிருவோங்குற கவலை யில சுளிக்கிற கவலையோட ரேகை அது, அதப்போயிநாம தப்பா நெனைச்சிக்கிறக் கூடாதுன்னு சொல்றவுங்கள்ல பெரு வரியானவுங்கஅந்த ஹோட்டலுக்கு சாப் புடப் போவாங்க.

நான் ஆந்து ஓய்ஞ்சி போயி இருக்குற நேரத்துலதான் சாப்புடப் போவேன். அவரு கடையில கொடல் கறி ஸ்பெஷல் ஜி,எங்க பத்துகிலோ மீட்டருக்கு அங்கிட்டு அவரு கடையில வந்து சாப்புட்டுப்போவாங்க,அதுக்கு அவர் கடை சாப்பாட்டு ருசி மட்டும் இல்லை,அவருகிட்ட இருக்குற இனிமையான பழக் கம் வழக்கம்,எந்த மனுசர் கிட்டயும் விரோதம் பாராட்டாம அன்பா பழகுற கொணம்ன்னு அவுங்ககிட்ட இருக்குற நல்ல கொணத்துக்காகவும் அவரு கடை தேடி வருவாங்க,,,,,,”

”காலையில அஞ்சு அஞ்சரை மணிக்கெல்லாம் கடை தெறந்துருவாங்க ஜி, இங்கிட்டு கல் குவாரிக ஜாஸ்தியில்லையா,அந்நேரமே தோசை மொச்சை வடைன்னு விக்க ஆரம்பிச்சிருவாங்க ஜி,

தோசைன்னா தோசை நீங்க பாத்தா பயந்து போவீங்க ,நம்ம வெரல் தடிம னுக்கு இருக்கும் ,நம்மள்ளாம் ஒரு தோசை இல்ல ரெண்டு தோசைக்கு மேல சாப்புட முடியாது, ஆனா அங்க வேலைக்குப்போறவுங்க நாலு தோசை ஒரு மொச்சை ரெண்டு வடைன்னு வாங்கி வடையப்பிச்சி மொச்சையில உதுத்துப் போட்டு சாப்புடுவாங்க,

வடை ஒண்ணொன்னும் கையகலம் இருக்கும்,நம்ம வீட்டுல சுடுற பெரிய இட்லி ஸைஸீக்கு/

மொச்சை அள்ளி வைச்சாருன்னா நம்மள்ளெல்லாம் பாக்கத்தான் முடியுமே தவிர சாப்புட முடியாது/

ஆனா இத்தனையும் கல்குவாரியில வேலை பாக்குறவுங்க முன்னாடி சாப்புற துக்காக யெலையில வைக்கிறதும் தெரியாது,அவுங்க சாப்புட்டு முடிக்கிற வேகமும் தெரியாது.அத்தனையும் சாப்புட்டு கல்க் குவாரிக்கு வேலைக்குப் போறவுங்கவுங்க பண்ணெண்டு மணிக்கெல்லாம் வீட்லயிருந்து வந்த சாப் பாட சாப்புட ஆரம்பிச்சிருவாங்க,

அவ்வளவுபசி,அவுங்கவேலைக்குஅவ்வளவு சாப்பாடுஇழுக்கும்ஜீ, எனக்குன் னா ஆச்சர்யமான ஆச்சரியம், என்னடா இது இவ்வளவு சாப்பாடா இழுக்குமு ன்னு,

“ஒரு லீவு நாளைன்னைக்கி நானும் ஏங் விட்டுக்காரியும் வேலைக்கு போனோம்,போன அன்னைக்கித்தான் தெரிஞ்சிச்சி ,ஒரு மணிநேரம் கூட என்னால அந்த வேலையப்பாக்க முடியல ஜீ,பாவம் அவுங்க நாளெல்லாம் எப்பிடித்தான் சுத்தியலத்தூக்கி கல்ல ஒடைச்சிக்கிட்டே இருக்காங்களோ ஜி,

ஒரு பக்கம் பெரிய ஸைஸ் பாறைகளை சம்மட்டி வச்சி அடிச்சி ஒடைக் கிறாங்க,ஒருபக்கம் ஒடைகல்ல ஒடைக்கிறாங்க,ஒருபக்கம் சின்னக் கல்லு கள ஜல்லியா ஒடைக்கிறாங்க,

சின்னச்சின்ன கல்லுகள,ஜல்லிகளா ஒடைக்கிறாங்களலஅதுதான் கூலிக்குப் போற பொம்பளைங்க வேலை,அவுங்கதான் ஜீ வேலை செய்யிறாங்க செய்யி றாங்க செஞ்சிகிட்டே இருக்காங்க ஜீ,

காலையில கையில புடிக்கிற சுத்தியல சாப்பாட்டு நேர யெடை வேளையி லயும் சாயங்காலம் வேலை முடிஞ்சி வீட்டுக்குப்போகும் போதும் தான் கீழ வக்கிறாங்கன்னா பாத்துக்கங்க,அவுங்களுக்கு இருக்குறது ஒடம்பா மிஷினா ன்னு சந்தேகமா போச்சி ஜீ/

இப்பிடி வருஷம் முழுக்க வெயில்லையும் மழையிலயும் ஒழைக்கிற மக்கள நெழல்ல ஒக்காந்துக்குற நாம எவ்வளவு ஈசியா பேசியும் மதிப்பிட்டு வைச் சிருக்கம் பாருங்க ஜீ என்பார்.

இவ்வளவும் சொல்லும் பெருமாள் அண்ணன் ”அப்பம் மதியம் வரைக்கும் இருங்க ஜி,இன்னும் என்ன ஒருமணி நேரந்தான இருங்க சாப்புட்டுட்டுப் போக லாம்,,,,” என்பார் வந்தவர்களை வரவேற்று/

பார்க்கிறவர்களுக்கு வேர்த்து விறுவிறுத்துப் போகும். அப்பிடி பேசுவார்,இவரா போன் பண்ணி பேசுகையில் அப்படியெல்லாம் பேசினார் அவர்களைப்பற்றி என எண்ணத் தோன்றும்.

அவ்வளவு உருக்கமும் மெய் நெருக்கமும் காட்டி பேசுகிற அவரது பேச்சு போனில்அப்படி இருப்பது குறித்து ஆச்சரியம் தெரிவித்துப்பேசினால் தொலை ஞ்சிபோறான்ன்னுவிட்டுறதுதான்,அதுக்காகஅவனோடஉண்மையான கொண த்தச்சொல்லாமஇருந்துறமுடியாதில்லையாஅதுனாலசொல்றேன்,கேட்டுக்கங்க, என்பார்/

அவர்சொல்படியும்பேச்சுபடியும்கேட்டுப்போகிறவர்களாய்இருந்தால் உண்மை உரைத்த அவரது பேச்சில் ஒரு பிரயோஜனம் கிடைத்த திருப்தி இருக்கும்.

பெருமாளண்ணனின் போன் வந்தகாலைநேரம் இன்னமும் கண் முழியாத தூக்கத்தில் இருந்தான்,

இரவு தூங்கசெல்கிற தாமதங்கள் மறு நாள் காலையின் விழிப்பை கொஞ்சம் எட்டி உதைத்து தடுமாறச்செய்து விடுகிறதுதான்.,

தடுமாற்றம் என்றால் சமயத்தில் லேசாய் தட்டி விட்டு எழுந்து செல்கிற தடுமாற்றமாயும்,அமைந்துபோவதுண்டு,சமயத்தில்அதனால்போக வேண்டிய வேலைகளுக்கு போக முடியாமல போகின்ற தடுமாற்றமும் நிகழந்து போகிற அவலமும் நேர்வதுண்டு,

அதை துடைத்தெறிந்து விட்டு செல்கிற சமயங்களில் தூக்கம் நிறைந்த விழிகளோடு பயணிக்க வேண்டியுள்ளது என்பதுதான் நிஜம்,அப்படித்தான் இது நாள்வரை பயணித்தும் வந்துள்ளான் கடந்தும் போயிருக்கிறான் தூரங்க ளை, இருந்தாலும் வழக்கமான சுறு சுறுப்புடனும் துள்ளலுடனுமாய் நாட்களின் நக ர்தலை எதிர் கொள்ள முடியவில்லை என்பதுதான் நிதர்சனமாகிப் போகிறது தூக்க விஷயத்தில்,,,/

இதற்காக ஆங்கில மருத்துவரிடம் போனபோது சற்றும் யோசிக்காமல் பேப்ப ரை எடுத்து தூக்க மாத்திரைகளை எழுதிக்கொடுத்து விடுகிறார்,பிறகு அவரி டம் இல்லை சார்,தூக்க மாத்தரை போட்டா நான் மறு நாள் நான் ஆபீஸி வேலைய நிம்மதியா பாக்க முடியாம போயிரும்,என்றதும் மருத்துவர் தூக்க மாத்திரை எழுதும் வேலையை விட்டு விடுவார்.அவர் அப்படியாய் எழுதிய பிரிஸ்கிரிப்சனை கிழித்துப்போடும் போது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும்,

அவர் விடுத்து ஹோமியோபதி மருத்துவரிடம் சென்றால் அவர் சொல்கிறார், தூக்கம் வர ஆரம்பித்து விட்டால் தூங்கி விடுங்கள் அது லேசாக வந்தாலும் சரி,கனமாக வந்த போதும் சரி,படுக்கையில் விழுந்து விடுங்கள்,தூக்கம் வர வில்லையானால் படுத்து கொண்டே நம்பர்களை எண்ண ஆரம்பித்து விடுங் கள். ஐம்பது என்னும்போது வரைகூட வராத தூக்கம் நூறு எண்ணும் போது வந்து விடும். அது விடுத்து தூக்கம்தான் வரவில்லையே என எழுந்து அமர் ந்து படிக்கவோ இல்லை வேறெதாவது வேலைசெய்ய ஆரம்பிச்சீங்கண்ணா, மூளை மறுபடியும் சுறுசுறுப்பாகி வேலை செய்ய ஆரம்பிச்சுரும், அதுக் கப்புறம் தூக்கம் வர்றது பெரும்பாடாப் போயிரும்.என்பார்.

சரிதான் அவர் சொல்வது என அனுபவத்தில் உணர்ந்த போது தெரிந்தது,

வம்பாகத்தான் அவர் கூப்பிடார் என எழுந்து போக வேண்டியிருக்கிறது,

நாற்புறமும்கைநீட்டி பாதை காட்டி சாலை விரித்துச்செல்கிற நார்க்கரச்சாலை அது,

சாலையின் நடுவே ஊன்றப்பட்டிருந்த போஸ்டில் யார் அனுமதியும் இன்றி சிவப்பு விளக்கு மட்டும் அமந்து அமந்து எரிந்து கொண்டிருந்தது,

நீந்திச்செல்கிற மீனாயும் பறந்து செல்கிற பட்டாம் பூச்சியாயும் மனிதர்கள் சைக்கிளிலிலும் இரு சக்கரவாகனங்களிலும் மற்றும் கனரக இலகு ரக வாகனங்களிலுமாய் சென்று கொண்டிருந்தார்கள்,இது போக பாத சாரிகளின் வரிசை தனி.

பறக்கிற பட்டாம் பூச்சியை எட்டிப்பிடிக்கிற வேகத்துடன் இரு சக்கர வாகன த்தில் சென்று கொண்டிருந்தவர்களும் தத்தித்தாவிய விட்டிலை வேறோரிடம் அமர விடாமல் எட்டிப்பறக்க வைக்கிற வித்தையுடன் ரோட்டில் விறைபவர் களை விரைந்து செல்கிறதாய் காட்சிப்பட்ட போக்குவரத்து ஓரிடத்தில் நிற்க விடாமல் துரிதப்படுத்தியதாய்,,,/

விரைந்து வருகிற பஸ்களும் லாரிகளும் இன்னும் இன்னுமான இரு சக்கர வாகனங்களும் நகரத்திற்குள் நுழையவும் நகருக்குள்ளிருந்து வெளியேறவு மான வழியின் இரண்டு ஓரங்களிலும் பஸ்டாப் அமைந்திருந்தது.

இதில் இடது புறமிருந்த பஸ்டாப்பின் ஓரம் இளநீர் விற்றுக்கொண்டிருந்தவர் எப்பொழுது இவனைப்பார்த்தலும் நன்றாக சிரிக்கக்கூடியவர்,

இவன் மட்டும் என இல்லை,அருகிலிருக்கிற போக்குவரத்து போலீஸ் ஸ்டே சன் மற்றும் அங்கு பஸ்ஸேற வருகிற போகிறவர்களிடம் நன்கு பழகக் கூடியவராய் இருந்தார்,

இந்த ஊர் பஸ் இத்தனை மணிக்கு என அறிவிக்கும் பலகையாய் காட்சிப் படுவார்.

ஒரு இளனி நாற்பது ரூபாய்க்கு குறைந்து அவரிடம் எப்பொழுதுமே விற்றதி ல்லை,ஏண்ணே இப்பிடி ஊரெல்லாம் முப்பத்தஞ்சி விக்கும் போது நீங்க மட்டும்,,,,என்றால் அண்ணே வாஸ்தவம்தான் இல்லைன்னு சொல்ல,ஆனா அங்க விக்கிற எளனிக்கும் நம்ம எளனிக்கும் வித்தியாசம் இருக்கு பாத்துக் கிடுங்க,நம்ம கடை எளனி ஏதாவது ஒண்ணு சூம்பிப்போயி இருக்கான்னு பாருங்க,ஸைஸீல இருந்து டேஸ்ட் வரைக்கும் எல்லாம் சூப்பர்,எளனிக்குள்ள குடியிருக்குற தண்ணி நீங்க குடிச்சதும் வயிறு நெரம்பிப்போகும்,ஒரு வேளை சாப்புடலைன்னாக்கூடநம்பகடைஎளனிஅதைஈடுகட்டீரும்.அதோட ஸைஸீம் தரமும்முக்கியமில்லையா,ஜனங்க குடுக்குற காசுக்கு நம்மகுடுக்குற பொருள் முக்கியமில்லையா,,,

போக நமக்குன்னு இருக்குற வாடிக்கையாளர்ங்க எங்கயும் போக மாட்டாங் கண்ணே, ஏன்னா அவுங்களுக்குத்தெரியும்.

இது போக பஸ் ஏறவர்றவுங்க,இந்த வழியா போறவுங்க இங்க வந்து குடிக் கும் போது கேப்பாங்க,

அவுங்களுக்கு நான் சொல்ற பதில் ஒண்ணேதான்,எளனிய குடிச்சி முடிச்சப் பெறகு ஒங்களுக்கு திருப்தியா இருந்தா மட்டும் காசு குடுங்க.இல்ல வேணா முன்னு சொல் லீருவேன்,ஒடனே அவுங்க பதறியடிச்சி மொதல்ல காச குடுத்துட்டு அப்புறமா எளனிய வாங்கிக்கிருவாங்க/நானும் சிரிச்சிக்கிட்டே காச வாங்கிப் போட்டுருவேன்.

காசக்குடுத்தவுங்கமனசுகுளுந்துநல்லாயிரும்எனச்சொல்கிறஎளனிக்கடைக்காரர்,ஆனால் இந்த முறை முக்கு ரோடு போன போது அவரை பார்க்க முடியவில்லை, கடைக்கு லீவு போட்டு விட்டார் போலும்,

எப்பொழுது முக்குரோடு போனாலும் இளநீர் குடிக்கிற இவன் குருவையா அண்ணனை கூட்டிக்கொண்டு போய் டீ சாப்பிட்டான் அன்று.

2 comments:

iramuthusamy@gmail.com said...

கல் ரேகை அருமை

vimalanperali said...

நன்றியும் அன்பம்!