12 Jul 2018

பூப்பின் வேர் பட்டு,,,,

இன்று ஹோட்டலில்தான் சாப்பிட வேண்டியிருக்கும் போலும்.

இங்கேயே என்றால் சட்டென சாப்பிட்டு முடித்து விட்டு அழுத்தும் வேலை யை முடித்து விடலாம்,இனி கடைக்குப்போய் விட்டு வந்து வேலையை தொடுகிற போதும் அதை முடிக்கிற போதும் வேலையில் இருக்கிற சுவார ஸ்யமும் வேகமும் போய் விடும்,கொஞ்சம் மட்டுப்பட்டுத் தெரியும், என்கிற இவனது நினைப்பை உணர்ந்தவராகவோ என்னவோ கனியண்ணன் சொல் கிறார்,

”சார் இனி என்னத்துக்கு கடைக்கிப் போயிட்டு,,,,,?இங்க இருக்குறத ஆளுக்குக் கொஞ்சமா பகுந்து சாப்புடலாம் வாங்க” என/

”பகுந்து சப்புட்டறலாம் அதுல ஒண்ணும் பிரச்சனையில்லைண்ணே,ஆனா பகுந்து சாப்புடக்குடுத்த ஒங்களுக்கும் காணாது,பகுந்து சாப்புட்ட எனக்கும் காணாது ,அப்புறம் அரை கொறை வயித்தோட அனிமிக்கா திரிய வேண்டிய தாகிப் போகும்,இது எதுக்கு வம்பு ஒரெட்டுப்போயி நான் கடையில சாப்புட்டு வந்துர்றேன்,இனி வீட்டுக்குப் போயி வர்றதுன்னா அது நடக்குற காரியம் இல் லை, அது கெடக்கு வீடு அஞ்சி கிலோ மீட்டருக்கு அப்பால/வேகாத வெயில்ல லொங்கு லொங்குன்னு போயிட்டு வர்றதுக்கு பேசாம ஒரு நூறு ரூவா செலவழிச்சி இங்கயே ஏதாவது ஒரு கடையில சாப்புட்டு வந்துர்லாம்ன்னு நெனைக்கிறேன்”என்றவனாய் மணியைப் பார்க்கிறான்.

கொஞ்சம் கழுத்தை வளைத்து தான் பார்க்க வேண்டியிருந்தது,மணியை/ இவன் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கொஞ்சம் அப்படிப் பார்த்தால்தான் தெரியும்,

வேலை வேலை வேலை என்கிற சக்கர வியூக ஓட்டத்தின் நடுவே சிக்கிக் கொண்ட பொறி எலி போல் இவன் அமர்ந்திருக்கிற இடம்,

ஒரு மேஜை ஒரு நாற்காலி,அதன் பின்னாக அமர்ந்திருக்கிற இவன்,

இவன் முன்னே சற்றும் பின் வாங்காத தோற்றத்துடன் சற்றே முரட்டுத்தனம் காட்டிய படி காட்சிப்பட்ட மேஜை ட்ராயரும் அதனுள்ளே உரை கொண்ட பணமும்,/

பணம்,பணம் ,பணம்,,,,பணம் தவிர்த்து இங்கு மனங்கள் வேறெதுவும் இல்லை என்பதாய் ஒரு நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கவும் பணம் கொடுக்கவுமாய் இருக்கிற இடத்தில் வேறெதுவும் எதற்கு,,,,மூச் விடப் டாது,/என்கிறது போல் காட்சிப்பட்ட அந்த இடத்தை இவன் போனதும் முடிந்த வரை கொஞ்சம் கலகலப்பாக்கி நிரப்புவான்,

”வாங்கம்மா,,,வாங்க சார்,,வாங்கண்ணே வாங்க தம்பி,,,, நல்லாயிருக்கீங்களா, ,,,? என்கிற சொல்லாக்கமும் செயலூக்கமும் இவனிடம் வேலையாய் வருகி றவர்களை கவர்ந்ததுண்டு சற்றே என நினைத்திருக்கிறான்,நினைத்து மகிழ்ந் தும் இருக்கிறான்.அனுவத்தில் கண்டும் கேட்டும் கூட இருக்கிறான்,

இதெல்லாம்மீறி அப்படிக்கேட்பது ஒரு நிறுவனத்திற்கு வந்து போகிறவர்க ளிடம் உண்டாக்கும் ஒரு சந்தோஷத்தேட்டம் என்பான் தெரிந்தவர்களிடம்,/

ஆனால் இதற்கு நேர்மாறாய் ”நல்லாயிருக்கீங்களா,,,” எனக்கேட்டு இப்பொ ழுது என்ன செய்யப் போகிறான் இவன்,நல்லாயில்லை என்று சொன்னால் என்ன செய்து விடுவானாம்,நன்றாக இருந்தால் மட்டும் என்னசெய்து விடுவா னாம்.,,, என்கிற வினாக்களைஉட்கொண்டவர்களைப்போல்பார்ப்பவர்களிடம் ஒடம்புக்குநல்லாயில்லைன்னா,எம்.பி.பி.எஸ்,,,,,ஸப்பாருங்க,,மனசுக்குநல்லா இல்லையில்லைன்னா மனநோய் மருத்துவர்கிட்டப் போயிக் கேளுங்க என் கிற ரெடிமேட் பதிலைச் சொல்லுவான்,

கேட்பவர்களும் இதற்கு சளையாதவர்களாக சிரித்துக் கொள்வார்கள்,”அட போங்க சார், நீங்க ஒருபக்கம் மூத்தது மிதிச்சி யெளையதுக்கு ஒண்ணும் ஆயிறப் போறதில்லங்குறது மாதிரி இருக்குற ஒங்க பேச்சும் சொல்லும் செயலும் எங்கள ஒண்ணும் செஞ்சிறாது சார்,மாறா ஒங்க சொல்லாக்கமும் ஒங்க செயலூக்கமும் ஒங்க அசைவும் எங்களுக்கு ஊக்கத்தக்குடுக்குமே தவி ர்த்து அதக் கேட்டு நாங்க மன சொடிஞ்சி போயிறவோ இல்ல மனத் தாங் கல் கொள்ளவோ போறதில்ல,நீங்க சொல்லுங்க, சும்மா,,,,” என்கிற பேச்சின் தேட்டம் நெசவூட்டம் கொண்டிருந்த ஒரு நாளின் நல்ல பசி மதியத்தில் நகை அடமானக்கடன் வாங்க வந்த முதியவர் ஒருவர் ”சார் இந்தப் பணம் படிப்புக் காகப்போகுது, மக புள்ள பேத்தியா டாக்டருக்கு படிக்கப்போறா, அவளுக்காகத் தான் இவ்வளவு அவசரமா,வீட்ல இருக்குற நகை நட்டப்பூராம் அரிச்சி எடுத்து கொண்டு வந்தேன்,அதான் கொஞ்சம் நேரம் ஜாஸ்தியா ஆயிப் போச்சி என்றவர்,,,,மொத மொத ஏங் குடும்பத்துல இருந்து ஏங் பேத்தியா டாக்ட ருக்குப் படிக்கப்போறா, அதுக்காக ஒதவப்போற இந்தப் பணத்த ஏதாவது ரெண்டு நல்ல சொல்லு சொல்லிக் குடுங்க என கையெடுத்துக் கும்பிட் டவரிடம், டாக்டருக்கு படிக்கப் போற ஒங்க பேத்தியா நல்லபடியா படிச்சி நல்ல பெரிய டாக்டரா வரணும்”,,,, என கைக்குள் பணத்தை வைத்தவாறே கும்பிட்டுக் கொடுத்த இவனிடம் அந்தம்மாள் பணம் வாங்குற போது அவளது கண்களில் நீர் திரையிட்டிருந்ததை பார்க்க முடிந்தது.

இது போல் நிறைய நிறைய நிறைந்து போனவைகளை சுமந்து கொண்டு நல்ல பசி நேரத்தை பசி நேரமாகவோ இல்லை பசியற்ற நேரமாகவோ கடந்து விட முயல்வதுண்டு/

அப்படியான நேரங்களில் கொஞ்சமாய் மடமடவென ட்ராயரில் இருக்கிற பணத்தை எடுத்து கொடுக்க வேண்டியவர்களுக்குக்கொடுத்து விட்டும் வாங்க வேண்டியவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டுமாய் கொஞ்சம் அண்ணாந்தும் கழுத்தை வளைத்துமாய் பார்த்த கடிகாரம் மணி இரண்டென சொல்லியும் எழுதியும் செல்கிறது.

காற்றின் திசைகளில் பரவி நின்ற அதன் சொல்லும் எழுத்தும் காலூன்றிய பொழுதுகளிலும் மணி அதே இரண்டாகவே/

“இரண்டு,இரண்டு இரண்டு,,,,,அதைக்கடந்தால் மூன்று மூன்று மூன்று என்கிற பெரும் வெளியை கடக்கும் முன் முன் பசி,பசி,பசி,,,,என்கிற சொல் நாற்றாங் கால் பதியனிடலாய் வயிற்றுக்குள் புது நடமிட்டு நிற்பதாகவும் புது உருவெடு த்து ஆடக்காத்திருப்பதாயும்.”./

இனியும் பொறுப்பதில்லை உணவுண்ண தாமதமாகிப்போன தனி ஒருவன் அலி நிலைக்கு போய் விடக்கூடாது என்கிற முன் ஏற்பாட்டில் சாப்பிட போவதே சாலச்சிறந்தது என்கிற மனோ நிலையில் சாப்பிட உட்கார்வான்.

வட்ட வடிவமாய் மணி சொன்ன கடிகாரம் தன் நிலையில் இருந்து தவறா தும் நிலை பிறலாமலுமாய் கண்ணுக்கழகாய் காட்சிப்பட்ட சின்ன முள்ளை யும் பெரிய முள்ளையும் அதன் துணையாய் அதன் தோள் மீது தட்டி ஆடிக் கொண்டோடும் விநாடி முள்ளையும் சேர்த்திழுத்து ஓயாமல் ஓடி நேரம் காட்டுகிற அழகை கவனிக்கிறவர்கள் அங்கு யாரும் இல்லை என குறை பட்டுக் கொண்டதாய் ஓடிக்கொண்டிருக்கிறது கடிகாரம்.

”நான் ஒரு பொருள் இருக்கிறேன் இங்கு உயிரற்ற காட்சியாயும் காலத்தின் சாட்சியாயும்/என்னை கொஞ்சம் கவனித்தும் உயர் உள்ளம் கொண்டு என் அழகை ஆராதித்தும் எனக்கு மடல் இடுங்கள் அல்லது அவசர குறிப்பொ ன் றை யார் மூலமாவதோ அல்லது புறாக்காலிலோ கட்டி அனுப்புங்கள், வாங் கிப் படித்து மகிழ்கிறேன்,

“வரையும் மடல் நீண்டு பட்டிருக்கும் சின்ன முள்ளின் முனையில் குண்டு பட்டு உருண்டிருக்கும் அதன் முனை அழகையும், அதை விட பெரிதாய் காட்சிப்பட்டு நீண்டிருக்கிற பெரிய முள்ளின் முள் முனை அழகையும் இவை இரண்டின் இருப்பையும் அர்த்தப்படுத்தியதாய் கூடவேயும் அவை இரண்டின் மீது உரசியும் அதன் தோள் தொட்டும் இடுப்புப் பிடித்துமாய் களி நடனமிட்ட படியுமாய் நளினம் காட்டி சென்று கொண்டிருக்கிற முட்கள் காலத்தை கை காட்டிமணி,மணி,மணி,,,,,,எனச் சொன்ன கடிகாரம் மணியண்ணன் எனச் சொல்லாமலும் நவாப்பழநிறம் காட்டாமலும் இதயம் தொட்டு பேசுகிறேன் என அங்கேயே நிற்காமலும் இடதும் வலதுமாய் மாறி மாறி வட்டமாய் பய ணித்தும் யூ டர்ன் அடித்தும் அட்டன்ஸனிலும் ஸ்டாண்டட்டீஸிலுமாய் வட்ட வடிவத்திற்குள் காலம் காட்டிக்கொண்டிருப்பதாக/

கொஞ்சம் அசந்தாலும் காட்டிக்கொண்டிருக்கிற காலம் காதல் மறந்தும் அதன் கூட்டு விட்டும் ,தோள் தவுவலும் இடுப்பொடித்தலுமான நடனமும் மறந்து நளினம் கெட்டு படக்கென கீழ் விழுந்து மேல் தாவியேறிப் போய் தேசாந் திரம் பூண்டு விடக்கூடாது என்கிற மனத்தேட்டத்திலும் கவலையிலுமாய் இவன் நிலையூன்றிக்கொண்டிருந்த வேளையில் மணி சொன்ன கடிகாரம் இவன் அன்று சாப்பாடு கொண்டு வரவில்லை என்பதை சொல்லிச்செல்கிறது,

”சாப்பாடு சாப்பாடு சாப்பாடு,,,,,,,அது இல்லாட்டி கூப்பாடு கூப்பாடு கூப்பாடு,,,, இதுதானா ஒங்களுக்கு,,,,இதவிட்டா வேறெதுவும் தெரியாதா,காலையில எந்திரிச்சோம், ஒரு வாக்கிங்,கீக்கிங் போனோம்,வீட்ல கூட மாட ஒத்தாசை யா ஏதாவது வேலை செஞ்சோம்ன்னு கெடையாது.ராத்திரி பண்ணண்டு மணி வரைக்கும் முழிச்சிருக்க வேண்டியது ,அப்புறமா காலையில எட்டு எட்டரை வரைக்கும் தூங்க வேண்டியது,எந்திரிச்சதும் அவசர அவசரமா குளிச்சிட்டு ஆபீஸ் போறேன்னு கெளம்ப வேண்டியது,இதுதான் ஒங்களுக்கு தெரிஞ்சது,,,”

“எத்தன தான் செய்யிறது,ஒத்தையில நானும்,காலையில எந்திரிச்சி பால் வாங்கீட்டு வந்து டீப்போட்டுக்கிட்டு இருக்கும் போதே தெருவுல வந்து நிக்குற தண்ணி ட்ராக்டர்ல தண்ணி புடிச்சிட்டு வரணும்.அது முடிஞ்சதும் அரிசிய தண்ணியில ஊரப்போட்டு பாத்தர பண்டங்கள கழுவி சுத்தம் பண்ணீட்டு அரிசிய குக்கர்ல போட்டு ஸ்டவ்வுல ஏத்தும் போது நீங்க எந்திரிப்பீங்க,

”ஒண்ணு நீங்க எந்திரிக்கிற நேரம் சமையல் மும்பரத்துல நான் இருப்பேன், இல்லநான் ஏதாவது கை வேலையா இருக்கும் போதுநீங்க எந்திரிப்பீங்க,நீங்க எந்திரிச்சி மொகம் கழுவி வர்றதுக்குள்ள ஒங்களுக்கு குடிக்க டீ ரெடியா வச்சிருக்கணும்,இல்லைன்னா ஐயாவுக்கு மூக்குக்கு மேல கோவம் வந்துரும்,

“அப்பிடித்தான் போன மாசத்துல ஒருநாளு டீக்கோண்டு வர லேட்டாயிரு ச்சின்னு கையில வச்சிருக்குற தண்ணிச்செம்பக்கொண்டு எறிஞ்சிட்டீங்க அது செவத்துல பட்டு பாத்தா வீடு பூராம் தண்ணியா சிந்தி சிந்துன தண்ணியில டீக்கொண்டு வந்த நானும் வழுக்கி விழுந்து,,,வழுக்கி விழுந்த என்னைய பிடிக்க வந்த நீங்களும் ஏங் மேல வழுக்கி விழுந்து ஒரே களேபரம் ஆகிப் போச்சி,

“விழுந்த வேகத்துல நீங்க என்னைய மொறைக்க,நான் ஒங்கள மொறைக்க ரெண்டு பேரும் மாறி மாறி மொறைச்ச மொறைப்பு அங்க சிந்திக்கெடந்த தண்ணியோட தண்ணியா காதலா கசிஞ்சுருகி ஓட ஆரம்பிச்சிருச்சி கொஞ்ச நேரத்துல,

“சரித்தான் எந்திரிச்சி டீயக்குடிங்க,புள்ளை இல்லாத வீட்ல துள்ளிகுதிச்ச கெழவனும் கெழவியும் போல ரெண்டு பேரும்,,,,,/கொடுமைடா சாமின்னு,,,,,/ சொன்ன பெரிய மகள அதட்டி சத்தம் போட்டு ரூமுக்குள்ல அனுப்பீட்டு ”அடியே இப்பிடியே ஈரத்துணியோடஎங்கயாவது ஒடிப்போயி இன்னொருக்க கல்யாணம் பண்ணிக்கலாமான்னுல் கேட்டு கண்ணடிச்சவருதான நீங்க, அது கல்யாணத்து மேல இருக்குற ஆசையில கேட்டீங்களா, இல்ல,,,,,ஒங்களபத்தி தெரியாது எனக்கு,,,” என அன்று நடந்ததை திரும்பவும் ஞாபகப்படுத்தினாள். இப்படியான ஞாபகப்படுத்துதல்களும் ஈரம் கொண்ட நினைவுகளும் கொஞ்சும் கொஞ்சம் சுகமே/என்கிற நினைப்புடன் இருக்கும் போது

“சரி நான் இன்னைக்கி மதியம் கொண்டு போறதுக்கு சாப்பாடு ஒண்ணும் பண்ணல,காலையிலைக்கு மட்டும் ரெண்டு தோசை ஊத்தி வச்சிருக்கேன் சாப்புட்டுப் போங்க,இன்னைக்கி ஒரு நாள் மதியம் கடையில சாப்ட்டுக்கங்க, எனக்கும் கொஞ்சம் ஒடம்பு சரியில்ல,தவிர பெரியவளும் காலேஜ் லீவுன்னு சொல்றா,நாங்க இங்க கடையில வாங்கி சாப்புட்டுக்கிர்றோம்,பெரியவ இன்னும் கடைக்கின்னு போயி வர்றதுக்கு யோசிக்கிறா,சின்னவ மாதிரி கூச்ச மத்து கடை கன்னின்னு போயி வர மாட்டேங்குறா,அதெல்லாம் ஒரு பிரச் சனை இல்ல,நாங்க பாத்துக்கிர்றம்,அவசியம்ன்னு வந்தா கடைக்கி என்ன சந்திர மண்டலத்துக்குன்னாலும் போயித்தான ஆகணும்.எனக்கூறிய அவளை ஏறிட்டவன் அவளது புடவையிலிருந்து கீழே விழப்போன பூவை எட்டிப் பிடித்து திரும்பவும் புடவையில் பொருத்தி வைத்து விட்டுக் கிளம்புகிறான்/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

vimalanperali said...

நன்றியும் அன்பும் சார்,
வருகைக்கும் கருத்துரைக்குமாய்,,/

வலிப்போக்கன் said...

வேலை..வேலை..வேலை... எட்டு மணி நேர வேலை போயி 12 மணி நேர வேலையாகி போனது.அதுவும் சொந்தத் தொழில் என்றால் .....!!!!!!!!1

vimalanperali said...

அன்பும் நன்றியும்
கருத்துரைக்கும்,வருகைக்கும்/